உத்தர பிரதேசத்தில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் மே 15ந்தேதி வரை ரத்து; அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு இன்றிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

Update: 2021-04-15 12:51 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 14,404 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  85 பேர் உயிரிழந்துள்ளனர்.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,18,293 ஆக உள்ளது.  95,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் ஒன்றான உத்தர பிரதேசத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் நகர், கவுதம புத்த நகர், காசியாபாத், மீரட், கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன்.

இதனை தொடர்ந்து, இந்த மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு இன்றிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.  இதன்படி, இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.  இதேபோன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் மே 15ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.  இந்த காலக்கட்டத்தில் தேர்வுகள் எதுவும் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்