மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 8,217 பேருக்கு தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று ஒரே நாளில் 8,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-15 16:30 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு நாளுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில், இன்று ஒரே நாளில் 8,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,159 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மும்பையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,189 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 10,097 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,54,311ஆக அதிகரித்துள்ளது. மும்பை மாநகரம் முழுவதும் தற்போது 85,494 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்