மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,59,056 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-04-15 16:46 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு நாளுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 61,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,39,855 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 349 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,153 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 53,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,59,056 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 6,20,060 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்