பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கை நீட்டிக்க கர்நாடக அரசு திட்டம்

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-16 19:38 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பெங்களூருவில் வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு கவலை அடைந்துள்ளது. பொதுமக்களுக்கு அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கொரோனா பரவலை தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கொரோனா தடுப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஏற்கனவே பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு வருகிற 20-ந் தேதி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

20-ந் தேதிக்கு பிறகும் இந்த இரவு நேர ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதை இன்னும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து வருகிற 20-ந் தேதி மீண்டும் ஒரு முறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்