கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.

Update: 2021-04-16 20:13 GMT
பெரும்பாவூர்

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதற்காக 56 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு 48 லட்சம் பேருக்கு போடப்பட்டு உள்ளது.

பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழா உள்பட 56 முகாம்கள் மூடப்பட்டு உள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தாலும் முகாம்கள் முழுமையாக நிறுத்தப்பட மாட்டாது என்றும் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா தெரிவித்து உள்ளார்

மேலும் செய்திகள்