ஆக்சிஜன் வாயுக் கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம்: மனதில் வலியை ஏற்படுத்துகிறது - பிரதமர் மோடி

ஆக்சிஜன் வாயுக் கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-04-21 11:09 GMT
புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், எதிர்பாராத விதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர ஆக்சிஜன் வழங்க முடியாததால், அங்குள்ள 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு பிரதர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஆக்சிஜன் வாயுக்கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்