திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-04-21 18:54 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேதப் பண்டிதர்கள் உபநிஷத், புருஷாசுக்தம், ஸ்ரீசுக்தம், பூசுக்தம், நீலாசுக்தம், பஞ்ச சாந்தி பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

ராம நவமி விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடந்தது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடந்தது.

மேலும் செய்திகள்