மராட்டியத்தில் பொது முடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநில அரசு

மராட்டிய அரசு நேற்று மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

Update: 2021-04-21 18:59 GMT
கோப்பு படம் (பிடிஐ)
மும்பை,

மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது கடந்த 13-ந் தேதி இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும் கொரோனா பரவலும், பலி எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 

இந்த நிலையில் மராட்டிய அரசு நேற்று மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி திருமணங்களில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 2 மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதேபோல அவசர, அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் தனியார் பஸ்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி முதல் மே 1-ந் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்