டெல்லியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் ஊரடங்கு மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2021-04-25 06:51 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திங்கட்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த வாரம் திங்கள் கிழமை(மே 3) காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்