டெல்லியில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: கெஜ்ரிவால்

டெல்லியில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-26 07:20 GMT
புதுடெல்லி,

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மே 1-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளன.

இந்தநிலையில், டெல்லியிலும் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:- 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடுவதென டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 

1.34 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். விரைவில் கொள்முதல் செய்யப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை  உறுதி செய்வோம்” என்றார். 

மேலும் செய்திகள்