வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் கொரோனாவுக்கு பலி

வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் ஜெகதீஷ் லாட் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-05-01 21:27 GMT
மும்பை,

இந்திய ஆணழகன் பட்டத்தை வென்றவர் ஜெகதீஷ் லாட் (வயது 34). மும்பையை அடுத்த நவிமும்பையை சேர்ந்த இவர் சர்வதேச அளவிலான போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நவிமும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதரா சென்று உள்ளார். அங்கு மனைவி, மகளுடன் தங்கி ஜிம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கடந்த ஆண்டு மார்ச் முதல் வேலையில்லாமல் வறுமையில் வாடி உள்ளார். வாடகை கொடுக்காததால் ஜெகதீஷ் லாடை அவரது வீட்டின் உரிமையாளர் ஊரை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக அவர் முழு அளவில் உடற்பயிற்சியையும் தொடர முடியவில்லை என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் ஜெகதீஷ் லாட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 4 நாட்கள் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்