ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு: பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை

ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 9:30 மணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-05-02 03:57 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

இந்தியாவில் பேரழிவான கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நேற்று முதன்முறையாக 400,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகள் பதிவானது. 

 இந்த சூழலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட மருந்துகள், ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதன்படி பிரதமர் மோடி இன்று காலை 9:30 மணிக்கு நிபுணர்களை சந்தித்து ஆக்சிஜன் மற்றும் மருந்து கிடைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

 மேலும் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக மனிதவள நிலைமை மற்றும் அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் மோடி மதிப்பாய்வு செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்