தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

Update: 2021-05-03 19:04 GMT
புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.  இவற்றில் அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருந்தது.  அதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும், பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் பறக்கும் படைக்கு வழங்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் நடந்து முடிந்து கடந்த 2ந்தேதி அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது.  அதன் முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்தன.  இதனை தொடர்ந்து தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை நீக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்