ஒடிசாவில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: இன்று முதல் அமலுக்கு வந்தது

கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பால் ஒடிசாவில் இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-05-05 02:53 GMT
புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில்  கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் 2-வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்தார்.  

இதன்படி, இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கானது வரும் 19 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் போக்குவரத்து சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சிக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்