உத்தர பிரதேசம்: மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள்; எப்.ஐ.ஆர். பதிவு

உத்தர பிரதேசத்தில் மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-05-10 17:14 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் படான் நகரில் முஸ்லிம் மத தலைவர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  கொரோனா பரவலால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கூட்டத்தில் பலர் முக கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கும்பலாக கலந்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி காவல் துறை எஸ்.பி. சங்கல்ப் சர்மா கூறும்பொழுது, படான் நகரில் மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் கொரோனா விதிகளை மீறி திரளாக கலந்து கொண்ட அடையாளம் தெரியாத மக்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.

ஐ.பி.சி. 188 மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்