கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட சுகாதார நல பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த 10 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட சுகாதார நல பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-05-10 17:25 GMT
திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனாவின் 2வது அலை சமீப நாட்களாக தீவிரமடைந்து உள்ளது.  தொடர்ந்து சில தினங்களாக தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்து பதிவானது.  இந்நிலையில், பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதுடன், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதார நல பணியாளர்கள் பலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில், அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு பொது செயலாளரான டாக்டர் டி.என். சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கேரளாவில் சுகாதார நல பணியாளர்கள் பலர் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகளாகி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட சுகாதார நல பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்