கொரோனா குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடத்த வேண்டும் - சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

கொரோனா பரவல் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்ட்த்தொடர் நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-05-10 18:32 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,62,575 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,53,818 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,45,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

குறிப்பாக, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள், படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கொரோனா குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ராஜன் சௌதிரி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்