தாகமாக நின்றுகொண்டிருந்த செல்லப்பிராணி தண்ணீர் குடிக்க உதவி செய்த போலீஸ் அதிகாரி... வைரல் புகைப்படம்

தாகமாக நின்றுகொண்டிருந்த செல்லப்பிராணி நாய் தண்ணீர் குடிக்க உதவி செய்த போலீஸ் அதிகாரியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2021-05-10 22:19 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அம்மாநிலத்தின் வாரணாசியில் ஒரு போலீஸ் அதிகாரி குடியிருப்பு பகுதி அருகே இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது, அந்த போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்த இடம் அருகே வந்த ஒரு செல்லப்பிராணி நாய் அங்கு இருந்த கைபம்பு அருகே நின்று கொண்டிருந்தது. அந்த கைபம்பு அருகே நின்று கொண்டிருந்த செல்லப்பிராணி நாய் தண்ணீர் தாக்கத்தில் அதனை சுற்றிக்கொண்டிருந்தது.

இதனை கவனித்த போலீஸ் அதிகாரி செல்லப்பிராணி நாய் தண்ணீர் தாக்கத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டார். உடனடியாக அவர் அந்த கைபம்பில் இருந்து தண்ணீரை இரைத்தார். 

இதனால், கைபம்பில் இருந்து வந்த தண்ணீரை அங்கு நின்றுகொண்டிருந்த செல்லப்பிராணி நாய் குடித்து தனது தாக்கத்தை தீர்த்துக்கொண்டது. செல்லப்பிராணி நாய்க்கு அந்த போலீஸ் அதிகாரி தண்ணீர் இரைத்துக்கொடுப்பதை அங்கிருந்த மற்றொரு காவலர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் ஐபிஎஸ் அதிகாரி மாதவ் மிஸ்ரா என்பவரால் அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டது.

அந்த புகைப்படத்துடன், ‘மனிதர் செல்லப்பிராணி நாயை விரும்பினால் அவர் நல்லவர். செல்லப்பிராணி நாய் ஒரு மனிதரை விரும்பினால் அந்த மனிதரும் நல்லவர்தான்’ என பதிவிட்டிருந்தார்.

செல்லப்பிராணி நாய்க்கு போலீஸ் அதிகாரி பம்பு மூலமாக தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்