கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டண நிர்ணயம் - அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்த அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-11 05:32 GMT
சென்னை,

கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், மாநில அரசு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான பொது வார்டுகளில், நாள் ஒன்றுக்கு ரூ.2,645 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பத்து மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கேரள உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்