டெல்லியில் மேலும் 13,287- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 17.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.

Update: 2021-05-12 10:48 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் மே 17 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக உச்சத்தில் இருந்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது.  

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,287- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 17.03- சதவீதமாக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,701 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 82,725- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டெல்லியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 58 ஆயிரத்து 951 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20,310 ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்