ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு

20 லட்சம் ஸ்ட்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-05-13 00:18 GMT
டேராடூன்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக கருதப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்கிக்கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், மத்திய அரசு வழங்கி வரும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் 20 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதகாக உத்தரகாண்ட் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த கொள்முதலை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்