மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக அமைச்சரவை இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-13 22:16 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 344 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 93 ஆயிரத்து 78 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நிதிக்காக மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை நன்கொடையாக வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மே 1-ம் தேதியில் இருந்து கடைபிடிக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.    

மேலும் செய்திகள்