மும்பையில் தொடர்ந்து குறைகிறது கொரோனா தொற்று

மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-16 19:51 GMT
மும்பை, 

மும்பையில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் மே மாதம் தொடக்கம் முதலே நகரில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் புதிதாக 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாதத்தில் நகரில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். இதுவரை நகரில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 696 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 லட்சத்து 36 ஆயிரத்து 753 பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போது நகரில் 35 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் மேலும் 60 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 260 ஆகி உள்ளது. நகரில் தொற்று பாதித்தவர்களில் 92 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நோய் பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 231 நாட்களாக உள்ளது. தாராவியில் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 478 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்