கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி

கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி நிறுவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-18 23:38 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ள 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் விரைவில் சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகிறது. இத்தகவலை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இவற்றில், 4 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. 52 நிலையங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் உள்ளன. 30 நிலையங்கள் பல்வேறு கட்ட நடைமுறையில் உள்ளன. ரெயில்வே ஆஸ்பத்திரிகளில், கொரோனா படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்