பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து.

Update: 2021-05-20 00:37 GMT
புதுடெல்லி, 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஜி.எஸ்.டி., பெட்ரோல்-டீசல் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை, மோடியின் நண்பர்களின் வருமானம், உணவளிப்போர் மீதான வன்முறைகள் போன்றவற்றை இந்த பெருந்தொற்று காலத்தில் மோடி அரசு ஏன் உயர்த்தியது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘வேளாண் மானியம், விவசாயிகளின் வருமானம் மற்றும் மத்திய அரசின் கண்ணியம் ஆகியவற்றை குறைத்தது ஏன்?’ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப்போல காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, 

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், வேளாண் பொருட்களுக்கான விலைகளை உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதற்காக விவசாயிகளை மத்திய அரசு தண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட உரத்தின் விலை விவசாயிகளை பாதிக்காத வண்னம், உரத்திற்கான மானியத்தை 140-சதவீதம் உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேலும் செய்திகள்