இங்கிலாந்தில் இருந்து 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் சரக்கு விமானம் டெல்லி வந்தது

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.

Update: 2021-05-22 17:28 GMT
புதுடெல்லி, -

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் நாடு முழுவதும் உயிர்காக்கும் ஆக்சிஜன் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இங்கிலாந்தின் பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்பட மொத்தம் 18 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானம் மூலம் இந்தியா கொண்டு சேர்க்கப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்