ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு: டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் படியாகவே உள்ளது.

Update: 2021-05-28 06:22 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை  தாக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது. எனினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் படியாகவே உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம்,  உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை 2500 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் அல்லது குடும்ப தலைவர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு 2500 மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்