பீகாரில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

பீகாரில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 8 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-31 09:56 GMT
பாட்னா,

பீகாரில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 8 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.  உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர்களை உள்ளடக்கிய மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.  

இந்த ஆலோசனைக்குப் பிறகு நிதிஷ் குமார் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பீகாரில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக  மே 5 - 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

பின்னர்  அது மே 25 வரை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 1 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்ட நிலையில்,  தற்போது   ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்