செய்தி நிறுவனங்களால் இயக்கப்படும் முன்னணி வலைத்தளங்கள் முடக்கம்
உலகளவிலான இணைய சேவை பாதிப்பு காரணமாக செய்தி நிறுவனங்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.;
வாஷிங்டன்
உலகளவிலான இணைய சேவை பாதிப்பு காரணமாக அமெரிக்கா செய்தி நிறுவனங்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனங்களால் இயக்கப்படும் முன்னணி வலைத்தளங்கள் தி பைனான்சியல் டைம்ஸ்,, நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், சிஎன்என்,பிரிட்டன் அரசின் இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்டது.
ரெடிட், டிவிச், ஸ்பாடிஃபை மற்றும் பின்டிரஸ்ட் இனையதலங்களும் பாதிக்கப்பட்டன.ஆனால் தற்போது இணையதளங்கள் படிபடியாக இயங்க தொடங்கி உள்ளன.