வங்காளதேச முன்னாள் பிரதமர் மறைவு: இறுதிச்சடங்கில் பங்கேற்கும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்;

Update:2025-12-30 19:47 IST

டெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 80. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் ஆவார். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கள் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்காளதேச தலைநகர் டாக்கா செல்கிறார். இந்தியா - வங்காளதேச உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்