பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹானுக்கு திருமணம்: பெண் யார் தெரியுமா?
இரு குடும்பத்தினரின் சம்மதத்து டன் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.;
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரெய்ஹான் வதேரா (வயது 25). இவர் தனது காதலி அவிவா பெய்க்குடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கிடம் திருமணம் செய்து கொள்ள ரெய்ஹான் வதேரா விருப்பம் தெரிவித்ததாகவும், அதை அவிவா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிச்சயதார்த்தம் தொடர்பாக இரு குடும்பங்களும் இன்னும் உறுதியான தகவலை தெரிவிக்கவில்லை.
அவிவா பெய்க் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கிறார்கள். இவரது குடும்பத்துக்கும் பிரியங்கா காந்தி குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் உள்ளது. அவிவா பெய்க் ஒரு புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். ரெய்ஹான் வதேரா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.