கிணற்றுக்குள் விழுந்த புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

புலியின் உறுமல் சத்தம் கேட்டு சிலர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.;

Update:2025-12-30 21:04 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வில்லோனிபரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்குள் இன்று புலி விழுந்துள்ளது. கிணற்றுக்குள் தண்ணீர் இருந்த நிலையில் அந்த தண்ணீரில் புலி தத்தளித்துள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த புலி உறுமியுள்ளது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அந்த கிராமத்தினர் சிலர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது , புலி கிணற்றில் உள்ள தண்ணீர் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கிணற்றுக்குள் விழுந்த புலியை பத்திரமாக மீட்டனர். பின்னர் , மயக்கம் தெளிந்ததும் புலியை சித்தார் வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்