ரஷிய அதிபர் புதின் வீடு மீதான டிரோன் தாக்குதல் கவலையளிக்கிறது; பிரதமர் மோடி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 405வது நாளாக போர் நீடித்து வருகிறது.;
டெல்லி,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 405வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். விரைவில் உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ரஷிய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ வீடு மீது உக்ரைன் நேற்று டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. 91 டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. புதின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் வீடு மீதான தாக்குதல் கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், ரஷிய அதிபரின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. மோதலை பேச்சுவார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டுவர முடியும். அனைத்து தரப்பும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான வலியுறுத்திகிறேன்’ என தெரிவித்துள்ளார்.