தடுப்பூசி தயக்கம் போக்க மத்திய அரசு நடவடிக்கை; மாநிலங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாக தகவல்

கிராமப்புறங்களில் உள்ள சுகாதார பணியாளர்களிடையே தடுப்பூசி பற்றி தயக்கம் இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

Update: 2021-06-11 18:35 GMT
இதற்கு பதில் அளிப்பதுபோல மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “தடுப்பூசி தயக்கம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, சமூக மட்டத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதை கவனத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி இயக்கம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய கொரோனா தடுப்பூசி தொடர்பு உத்தி அனைத்து மாநிலங்களுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் பகிரப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்திகளை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப பின்பற்றி வருவதாகவும், தடுப்பூசி தயக்கம் தொடர்பாக தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் நெருங்கிப் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்