ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி - அரசு அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-06-15 11:26 GMT
ராஞ்சி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

ஆனால் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மருத்துவ சேவைகள், அத்தியாவசிய சேவைகளுக்குத் தடையில்லை. மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்