டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை: ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும் - அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும் என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2021-06-15 11:52 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை தவிர பிற வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ஏப்ரல் 22ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 வார முழு ஊரடங்கு டெல்லி முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதனை தொடர்ந்து நோய்த் தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து டெல்லியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 18 முதல் வெளிநோயாளிகளின் பிரிவு படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இணையதளத்தில் அல்லது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்