வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோசை 28 நாட்களுக்கு போட்டு கொள்ளலாம்

வெளிநாடு செல்லும் குறிப்பிட்ட பயணிகளுக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-15 12:37 GMT
புதுடெல்லி

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின் இரண்டாவது டோசை 84 நாட்களுக்குப் பின் போட வேண்டியுள்ளது. எனினும் கல்வி, வேலை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் பயணிகளின் நலன் கருதி, கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 28 நாட்களுக்குப் பின் போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்