பிரதமர் மோடி தலைமையில் காஷ்மீர் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அனைத்து கட்சி கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தொடங்கியது.

Update: 2021-06-24 10:48 GMT
புதுடெல்லி

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. 

அதன்படி ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அனைத்து கட்சி கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தொடங்கியது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி கலந்து கொண்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்து குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தையை நிலையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கைகளும் இன்றைய ஆலோசனையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்