பாதிக்கப்பட்ட பெண்ணிடம் "நீ அனுபவிக்க வேண்டியவள் தான்" என கூறிய மகளிர் ஆணைய தலைவிக்கு எதிர்ப்பு

நீ அனுபவிக்க வேண்டியவள் தான் என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறிய கேரள மகளிர் ஆணையத்தின் தலைவி எம்.சி. ஜோஸ்பினுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது

Update: 2021-06-25 05:44 GMT
Image courtesy : timesofindia.com
திருவனந்தபுரம்

“குடும்ப வன்முறை குறித்து போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றால் அந்த நரகத்தை நீ அனுபவித்தாக வேண்டும்” என குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் கேரள மகளிர் ஆணையத்தின் தலைவி எம்.சி. ஜோஸ்பின் சொல்லியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. 

மலையாள செய்தி சேனல் ஒன்றில் தொலைபேசி மூலமாக பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் கேரள மகளிர் ஆணைய தலைவி ஜோஸ்பின். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண் தயக்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவரிடம் அதட்டும் தொனியில் கேள்வி கேட்ட ஜோஸ்பின் ‘கணவரும், மாமியாரும் தன்னை துன்புறுத்துகிறார்கள்’ என பாதிக்கப்பட்ட பெண் சொன்னதும், ‘இது குறித்து நீ யாரிடமாவது சொல்லி உள்ளாயா?’ என ஜோஸ்பின் கேட்க இல்லை என்கிறார் அந்த பெண். அதற்கு  ‘நீ அனுபவிக்க வேண்டியவள்’ என ஜோஸ்பின் சொல்கிறார், அது நேரலையில் பதிவாகி உள்ளது. 

இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் பதவி விலக வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். காங்கிரசும் பா.ஜ.க.வும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி.ஜோசபின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.


மேலும் செய்திகள்