நேற்றை விட அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-01 04:20 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 45,951 ஆக பதிவாகி இருந்தது. 

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 48 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,04,11,634 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,99,459 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 61,588 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 96.97 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 33 கோடியே 57 லட்சத்து 16 ஆயிரத்து 019 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்