சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மே.வங்க அரசுக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-03 08:57 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அம்மாநில பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். எனினும், மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதையடுத்து, கடந்த மே 18-ம்தேதி சுவேந்து அதிகாரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மே.வங்க அரசு விலக்கிக்கொண்டது. சுவேந்து அதிகாரி மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருப்பதால் அவருக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப வழங்கக்கோரி சுவேந்து அதிகாரி சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்,  பாதுகாப்பை மீண்டும் வழங்க உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்