மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்: 12 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டு

மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக சபாநாயகரால் 12 பேர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

Update: 2021-07-05 10:52 GMT
மும்பை

கொரோனா 2-வது அலையின் காரணமாக மராட்டிய மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரை 2 நாட்களில் சுருக்கமாக நடத்தி முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

மராட்டிய மாநில  சட்டசபையின் மழைகால கூட்டத்தொடர் இன்று  தொடங்கியது. கூட்டத்தில்   பா.ஜனதா  எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர்  பாஸ்கர் ஜாதவ்  12 எம்.எல்.ஏக்களை  ஓராண்டுக்கு  சஸ்பெண்ட் செய்தார். 

பா.ஜனதா  எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட்  செய்வதற்கான தீர்மானத்தை  மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனில் பராப் அவர்களால் நகர்த்தப்பட்டது, அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சஞ்சய் குட், ஆஷிஷ் செலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், பராக் அலவானி, ஹரிஷ் பிம்பலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புட் மற்றும் பன்டி பாங்கட் ஆகிய 12 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்று அனில் பராப்  கூறினார்.

முன்னாள் முதல் மந்திரியும்  சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜனதா எந்ததவறும் செய்யவில்லை என கூறி உள்ளார்.

12 பா.ஜனதா  எம்.எல்.ஏக்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவர்கள் மாநில சட்டசபையில்  இருந்து சஸ்பெண்ட்  செய்யப்பட்டதற்கு  கடும்  கண்டனம் தெரிவிப்பதாகவும் பட்னாவிஸ் கூறினார்.

மேலும் செய்திகள்