கேரளாவில் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்த பாம்பு மீது வழக்கு

கேரளாவில் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்த பாம்பு மீது வழக்கு

Update: 2021-07-12 21:17 GMT
திருவனந்தபுரம், 

திருவனந்தபுரம், பாளையத்தில் மிகவும் பழமையான உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு காட்டாக்கடையை சேர்ந்த ஹர்ஷாத் (வயது 45) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். அங்குள்ள பம்பு பண்ணையில் பாம்புகளுக்கு உணவு வைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பாம்பு பண்ணையில் தனியாக வைத்திருந்த பாம்புகளின் அறையை சுத்தம் செய்தார். பின்னர், கார்த்திக் என்ற ராஜநாகத்துக்கு உணவு வைத்தார். அப்போது, அந்த பாம்பு திடீரென ஹர்ஷாத்தை கடித்தது. இதில் சிகிச்சை பலனின்றி ஹர்ஷாத் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரியல் பூங்கா உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கேரள அரசு, இறந்த ஹர்ஷாத்தின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக அறிவித்ததுடன், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் ஹர்ஷாத்தை கடித்த கார்த்திக் பாம்பு மீது மியூசியம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாம்பு மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்