ஆணவக்கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மம்தா, பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக சகோதரரின் நண்பரான கேரளாவைச் சேர்ந்த அமீத் நாயரை கடந்த 2015-ம் ஆண்டு மணந்தார்.

Update: 2021-07-12 23:23 GMT
இரண்டு ஆண்டுகள் கழித்து மம்தாவின் பெற்றோர், அவரது கணவரை ஜெய்ப்பூரில் வைத்து துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மம்தாவின் சகோதரர் முகேஷ் சவுத்ரிக்கு ஜெய்ப்பூர் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி ஜாமீன் அளித்திருந்தது.

அதற்கு எதிராக மம்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.

அதில், ஆணவக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சவுத்ரிக்கு ராஜஸ்தான் ஐகோர்ட்டு அளித்த ஜாமீனை ரத்து செய்கிறோம். முகேஷ் சவுத்ரி செசன்ஸ் கோர்ட்டில் சரணடைய உத்தரவிடுகிறோம். ஆணவக்கொலை வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்