எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது - தர்மேந்திர பிரதான்

மும்மொழிக் கொள்கை மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-19 09:29 GMT
புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது.  மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியதும் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை பிதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அந்நேரத்தில் எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர். இதனிடையே எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மும்மொழிக் கொள்கை மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்