ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

Update: 2021-07-22 03:31 GMT
கோப்புப்படம்
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்