2024 சட்டசபை தேர்தலில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பதே இலக்கு: மராட்டிய காங்கிரஸ் தலைவர்

2024 சட்டசபை தேர்தலில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பதே இலக்கு என நானா படோலே கூறியுள்ளார்.

Update: 2021-07-25 19:46 GMT
வெற்றி இலக்கு
மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே, மாநில அரசு அவரை கண்காணித்து வருவதாக சமீபத்தில் கூறினார். மேலும் அவர் புனே மாவட்ட பொறுப்பு மந்திரியாக காங்கிரசை சேர்ந்தவரை வைக்க வேண்டும் என கூறியதும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் அவர் 2024 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என கூறியுள்ளார்.

மத்திய அரசு
இதுகுறித்து அவர் கூறுகையில், “மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.2 லட்சம் தான் வழங்குகிறது. இதேபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. எனவே தான் அவர்கள் அதுகுறித்த தகவலை கோர்ட்டில் வழங்க மறுத்து விட்டனர்.

2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற செய்யவேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்றார்.

மேலும் செய்திகள்