பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் மோடியை சந்தித்தபின்பு இருவரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

Update: 2021-07-26 06:10 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். 

அதேபோல், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியை ஒ  பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர். அதிமுக விவகாரங்கள், தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 பிரதமருடனான இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை,  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்