தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவிப்பு ;பிரதமர் மோடி மகிழ்ச்சி

மாணவப் பருவத்தில், நான் முதன்முதலாக தோலாவிரா சென்றுள்ளேன். அந்த இடம் என் மனதைக் கவா்ந்தது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Update: 2021-07-29 09:56 GMT
புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. இதற்கு  பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இது கண்டிப்பாக காண வேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாசாரம் மற்றும் தொல்லியலில் ஆா்வமுள்ளவா்கள் காண வேண்டிய இடம் என அவா் கூறியுள்ளாா்.

இந்த தொடா்பான யுனெஸ்கோவின் அறிவிப்பை இணைத்து பிரதமா் தனது டுவிட்டரில்  வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 

இந்தச் செய்தியால் முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன். தோலாவிரா முக்கியமான நகா்ப்புற மையமாக இருந்தது. நமது பழங்காலத்துடன் மிக முக்கிய தொடா்புகளைக் கொண்ட இடங்களில் ஒன்றாக உள்ளது.

மாணவப் பருவத்தில், நான் முதன்முதலாக தோலாவிரா சென்றுள்ளேன். அந்த இடம் என் மனதைக் கவா்ந்தது. குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது, தோலாவிராவை பாரம்பரிய இடமாகப் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பது தொடா்பான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் என்று கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்