மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா வரவேற்பு

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-30 18:53 GMT
புதுடெல்லி, 

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை பா.ஜனதாவின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு வரவேற்று உள்ளது.

இது தொடர்பாக அந்த பிரிவின் தலைவர் கே.லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோடியின் தலைமையின்கீழ், உள்ளடக்கிய வளர்ச்சி கொள்கையைப் பின்பற்றி, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கும் உறுதிப்பாட்டை கொண்ட ஒரு அரசை மக்கள் பெற்றுள்ளனர்’ என்று பாராட்டியுள்ளார். 

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு எனக்கூறியுள்ள கே.லட்சுமணன், இந்த நடவடிக்கையால் ஆண்டுதோறும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்